tamilnadu

img

மோடியின் ஏட்டுச் சுரைக்காய் வாக்குறுதி!

லக்னோ:
பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் அறிவித்த திட்டங்களை, ஏட்டுச் சுரைக்காய் வாக்குறுதிகள் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடி அவரது சுதந்திரதின உரையில், வறுமை ஒழிப்பு,வேலையில்லா திண்டாட்டம், கல்விகற்பதற்கான சூழ்நிலையை உருவாக்குவது ஆகியவற்றுக்கான வலுவான திட்டங்களை அறிவிக்கவில்லை. விளிம்பு நிலையில் இருக் கும் சமூகத்தை சேர்ந்த மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். அச்சம் இல்லாத சூழ்நிலை உருவாக்கப்படும் என்றும் உறுதி அளிக்கவில்லை. முக்கிய பிரச்சனைகள் குறித்து, எதுவுமே மோடி பேசவில்லை. அவரது சுதந்திர தின பேச்சின் மூலம் சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும் என்ற முழு நம்பிக்கை ஏற்படவில்லை. மத்திய பா.ஜனதா அரசின் பெரும்பாலான வாக்குறுதிகளும், அறிவிப்புகளும் ஏட்டளவிலேயே உள்ளன. அவற்றை செயல்படுத்த வலுவான திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை. அதுபற்றி பிரதமர் குறிப்பிடவும் இல்லை.ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் தங்கள் நலனுக்காக அரசு பாடுபடுகிறது என்ற உணர்வு அந்த மாநில மக்களிடையே ஏற்பட வேண்டும். இந்த நேரத்தில் காஷ்மீரில் கடும் கட்டுப்பாடுகளை விதிப்பது தேவையற்றது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஏழைகள், தொழிலாளர்கள் வாழ்க்கை மேம்படவில்லை என் றால் அங்கு நிலைமை மேலும் மோசமாகும். வெறும் பேச்சு பயன்தராது.இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.

;